அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நுாற்றாண்டு விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 03:05
சேலம் ; அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நுாற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று பலவிதமான இனிப்புகள், பழங்கள், அன்னபிரசாதங்களால் ‘அன்னக்கூடை’ என்ற திருப்பாவாடை உற்சவம் பட்டாச்சாரியார்களால் நடத்தி வைக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.