பதிவு செய்த நாள்
15
மே
2023
06:05
குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் உள்ள, கெங்கையம்மன் கோவில், சிரசு திருவிழா, இன்று (மே 15ல்) கோலாகலமாக நடந்தது.
விஷ்ணுவின் அம்சமான, பரசுராமன், தனது தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்ப்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதிக் கரையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று (மே15)ல் காலை, 5:00 மணிக்கு, தரணம்பேட்டையில் உள்ள, முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள், பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளுடன், அம்மன் சிரசுவை ஊர்வலமாக எடுத்து, கெங்கையம்மன் கோவிலை சென்றடைந்தனர். இதைக்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். இந்த சிரசு திருவிழாவிற்காக இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தரணம் பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்படும் சிரசு 2 கிலோ மீட்டர்கள் ஊர்வலமாக சென்று கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனின் உடலில் பொறுத்தப்பட்டது.