காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 06:05
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நடந்த 17 நாட்களில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியதை இன்று கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி முன்னிலையில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பணத்தை கணக்கிடம் பனியில் ஈடுபட்டனர் அதில் ரொக்க பணமாக ஒரு கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 337 ரூபாய், தங்கம் 60 கிராம், வெள்ளி ஒரு கிலோ 7 கிராம் மற்றும் கோ பாதுகாப்பு அறக்கட்டளை உண்டியல் மூலம் 8,512 ரூபாய் இருந்தது. வெளிநாட்டு பணம் அமெரிக்கா 84 டாலர்:, மலேசியா 317 ரிங்கிட்ஸ், யு.எ.இ. 560 ரிங்கிட்ஸ், கனடா 10 டாலர், சிங்கப்பூர் 14 டாலர் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.