ஊட்டி: ஊட்டியில், நடராஜ குருவின், 50 வது மகா சமாதி தினம், குரு நித்ய சைதன்யதி 24 வது ஆண்டு மகாசமாதி நாள், குருகுலத்தின் நெறிமுறைக்கான மறு சமர்ப்பணம் சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை, 9:30 மணிக்கு ஹோமம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. சுவாமி தியாகியிஸ்வரன் தலைமையில் நடந்த ஆன்மிக கருத்தரங்கு நடந்தது.
மவுண்ட் பள்ளி அறக்கட்டளை செயலாளர் கிருஷ்ணன் பேசுகையில்," நடராஜகுரு நீலகிரி லைப்ரரியில் உரை நிகழ்த்தியுள்ளார். உலகின் மிக சிறந்த தத்துவஞானி உயர்ந்த சிந்தனைக்கான அவரின் புத்தகங்கள் இந்திய தத்துவ நிலையில் என்றும் நிலைத்திருக்கும்." என்றார். சிவதாஸ் மானஸ் பேசுகையில்," நாராயண குரு தமிழகத்தின் ஆகச் சிறந்த பண்டிதர்களால் தமிழ் புலமையுடன் உயர்ந்த ஆன்மீக கல்வியும் கற்றார். குருகுலம் உலகளாவிய தத்துவஞானிகளை கொண்டாடிய பெருமை கொண்டது. என்றார். தொடர்ந்து, குரு நித்திய சைத்தன்ய சமாதியில் அமைதி பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை வியாச பிரசாத் மற்றும் கீதா காயத்ரி செய்திருந்தனர்,