காரைக்கால்; காரைக்கால் அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா முன்னிட்டு கடந்த 2ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் மகா மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பூங்கரகம் ஊர்வலகமாக கோவிலுக்கு அருகில் உள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக தீமிதி திருவிழா மிக் விமர்ச்சியாக நடைபெற்றது.வரும் 22ம் தேதி புஷ்ப பல்லாக்கு வீதியுலா,23ம் தேதி மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு.30ம் தேதி உதிரவாய் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.