மலேசியா பத்துமலை முருகனுக்கு பழநி கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 03:05
பழநி: பழநி கோயிலில் இருந்து மலேசியாவில் உள்ள பத்துமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு வஸ்திரம் மரியாதை செய்ய குழு புறப்பட்டது.
பழநி, கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து, மலேசியாவில் உள்ள பத்து மலை சுப்பிரமணியர் கோயில் சுவாமிக்கு வஸ்திர மரியாதை செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கான பூமாலை, பழங்கள், வஸ்திரங்கள் ஆகியவை பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜை, தீபாதாரணை நடைபெற்றது. கோயில் யானை கஸ்தூரியுடன், வஸ்திரங்களை இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் ராஜசேகர், சுப்பிரமணியம் கோயில் ஊழியர்கள் பெரியநாயகி அம்மன் கோயிலை வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து அறங்காவலர் ராஜசேகரன் மற்றும் அர்ச்சகர்கள் மலேசியா சென்று பத்துமலை சுப்பிரமணியர் சுவாமிக்கு வஸ்திரம் மரியாதை செய்ய உள்ளனர்.