பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
திருவள்ளூர்: ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்ஸவத்தை முன்னிட்டு வீரராகவ உற்சவ மூர்த்தி, வரும் 2ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வருகை தருகிறார்.ஸ்ரீபெரும்புதூர் வேதாந்த தேசிகன் அவதார மகோற்ஸவம், வரும் 26ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை சாத்துமறையுடன் நடைபெறுகிறது. மகோற்ஸவத்தின் கடைசி நாளான அக்.,2ம் தேதி வீரராகவ சுவாமி உற்சவர், ஸ்ரீபெரும்புதூர் வருகை தருகிறார்,அக்.,1ம் தேதி திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு வீரராகவ உற்சவர், திருவள்ளூரிலிருந்து புறப்பட்டு மறுநாள், அக்.,2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்தடைகிறார்.அங்கு பூஜைகள், அபிஷேகம், வீதிபுறப்பாடுகள் முடித்து கொண்டு, அக்.,3 ம்தேதி அதிகாலை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து புறப்பட்டு, காலை 10 மணி அளவில் மீண்டும் திருவள்ளூர் வந்து சேர்கிறார். கோவிலின் பரம்பரை அறங்காவலர், அகோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் சார்பில், கவுரவ முகவர் சம்பத் இத்தகவலை தெரிவித்து உள்ளார்.