பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பழுதாகி கிடந்த, "ஏஸி, நேற்று சரிசெய்யப்பட்டது.ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில், வாரந்தோறும் சனிக்கிழமை, புரட்டாசி மாதம், சொர்க்கவாசல் திறப்பு, தேர்த்திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோட்டையில் குவிவர்.கோட்டை பெருமாள் கோவில் கருவறை முன் கும்மிருட்டாகவும், புழுக்கமாகவும் இருந்ததால், கருவறையில் மின் விளக்கு, "ஏஸி வசதி ஏற்படுத்த, அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கஸ்தூரி அரங்கநாதர் சன்னதி, கமலவல்லி தாயார் சன்னதி ஆகியவற்றில், சில ஆண்டுக்கு முன், "ஏஸி மிஷின் பொருத்தப்பட்டதால், பக்தர்கள் குளு... குளு...வென தரிசனம் செய்தனர். சில வாரங்களுக்கு முன், "ஏஸி மிஷின்கள் பழுதாகின.புரட்டாசி முதல் சனிக்கிழமையின் போது, திரண்ட கூட்டத்தால், கருவறைக்குள் கடுமையான வெப்பம் நிலவியது. "ஏஸி மிஷினை பழுது நீக்கி தர, பக்தர்கள் பலரும், அறநிலையத்துறையிடம் கோரினர். நேற்று, இரு, "ஏஸி மிஷின்களும் சரி செய்யப்பட்டன. இவை அடிக்கடி பழுதாகின்றன. புதிய, "ஏஸி மிஷின் பொருத்த, நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் என, கோவில் ஊழியர்கள் கூறினர்.