திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை பூஜை; சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 06:05
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி கிருத்திகை, அமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியசாமிக்கு பால்,பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதையொட்டி சுற்றுவட்டாரங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.