பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி வேலைகளைச் செய்ய சொல்லுவார். அவளின் துாக்கம் அதிகாலையில் கெடுவதால் சேவல் மீது பணிப்பெண்ணுக்கு கோபம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் சேவலை கொன்று தின்றாள். விடிகின்ற நேரம் தெரியாமல் அவதிப்பட்டார் வீட்டுப்பெண். நள்ளிரவில் வேலைக்காரியை எழுப்பி வேலை செய்ய சொன்னாள். சுதந்திரம் பறி போனதே என வருத்தப்பட்டாள். இன்று பெரும்பாலான மக்கள் இப்படி தான் சோம்பலாக இருக்கிறார்கள். உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்.