நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
நத்தம்; நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி கடந்த மே 15 கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மே 16 சந்தனக்கருப்பு சுவாமி கோவிலிலிருந்து கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. மே19 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் அக்கினிசட்டி, பால்குடம், சந்தனகுடம் எடுத்து வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து மின் ரதத்தில் பகவதி அம்மன் நகர்வலம் வந்தது. நாளை அரண்மனை பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராடுதலோடு திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.