நாகமநாயக்கன் பாளையம் கானியப்ப மசராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 10:05
சூலூர்: நாகமநாயக்கன் பாளையம் ஸ்ரீ கானியப்ப மசராய பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சூலூர் அடுத்த நாகமநாயக்கன் பாளையத்தில், உச்சக்கோனார் வம்சத்தின் குலதெய்வமான, 305 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கானாத்தாள் ஸ்ரீ மாயாத்தாள் சமேத ஸ்ரீ கானியப்ப மசராய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு உற்சவ திருவிழாவானது கடந்த, 22 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மை அழைத்தலும், சாமி ஆற்றுக்கு செல்லும் வைபவமும் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கரகம் ஆற்றில் இருந்து புறப்பட்டது. 11:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. தொடர்ந்து வள்ளி கும்மி ஆட்டமும், மாவிளக்கு எடுத்து வருதலும் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.