பதிவு செய்த நாள்
25
மே
2023
12:05
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே காவேரிசெட்டிபட்டியில் வலம்புரி செல்வ விநாயகர், காவேரி குங்கும காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் கணபதி ஹோமம், யாஹ பூஜை,முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லதான்பாறை - அழகர்கோவிலிருந்து முளைப்பாரி, தீர்த்தம் அழைத்து வரப்பட்டது.பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து வாஸ்துசாந்தி, கணபதி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரிசெட்டிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.