பதிவு செய்த நாள்
25
மே
2023
03:05
சிதம்பரம்; குழந்தை திருமண விவகாரம் மற்றும் தீட்சிதர் சிறுமிகளுக்கு நடந்த இரு விரல் சோதனை குறித்தும், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் காவல் துறையினரிடம் புதுடில்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று விசாரணை மேற்கொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடந்ததாக கடலுார் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிந்து தீட்சிதர்கள் சிலரை கைது செய்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தீட்சிதர் சிறுமிகளிடம் இரு விரல் சோதனை நடத்தியதாக சிறுமிகளின் பெற்றோர் மனித உரிமை ஆணையம், தேசிய குழந்தைகள் ஆணையம் உள்ளிட்ட துறையினருக்கு புகார் அளித்திருந்தனர். இப்பிரச்சனை உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த நிலையில், தமிழக கவர்னர் ரவி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சிறுமிகளுக்கு இரு விரல் பிரிசோதனை நடந்தது குறித்து பொது வெளியில் பேசினார். அதனை தொடர்ந்து இப்பிரச்சனை மிண்டும் பூதாகரமானது அதனை தொடர்ந்து மீண்டும் சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தைகள் திருமண பிரச்சனையும், இரு விரம் சோதனையும் கடும் விவாதத்திற்குள்ளானது. அதனை தொடர்ந்து நேற்று புதுடெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், குழந்தை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட தீட்சிதர் சிறுமி மற்றும் குழந்தை திருமணம் குறித்து வழக்கு பதிவு செய்த சிதம்பரம் மகளிர் காவல் நிலைய காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு ஆவணங்களை பார்வையிட்டார். முதலில் கோவிலில் தீட்சிதர்கள் விசாரணை மேற்கொண்டு. அதன் பின் சிதம்பரம் மகளிர் காவல் நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் தீட்சிதர் சிறுமியிடம் விசாரணை செய்ய கோவிலுக்கு வந்த டாக்டர் ஆனந்த, அங்கு சிறுமி இல்லை. சிறுமி அச்சமாக இருப்பதாக தீட்சிதர்கள் தெரிவித்ததையடுத்து, கீழவீதி கோவில் சன்னதியில் உள்ள ஒரு தீட்சிதர் விவீட்டில் தீட்சிதர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த இரு விரல் பரிசோதனை குறித்தும், புதுடில்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் விசாரணை மேற்கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ஆன்ந்த பேட்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைம் சார்பில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வந்துள்ளோம் தமிழக கவரனர் தீட்சிதர்கள் குழந்தை திருணம் குறித்தும் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் அதனை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ஆணையர் பிரியம்கணுங்கோ தமிழக காவல் துறையினரிடம் வழக்கு குறித்து அறிக்கை கேட்டிருந்தனர் அரசு அனுப்பிய அறிக்கை சரியா என விசாரணை செய்ய வந்துள்ளேன் 3 கட்டமாக இந்த விசாரணை நடந்தது முதலில் தீட்சிதர்கள் பின்னர் காவல் துறை. அதன் பின் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரணை மேற்கொண்டு முழுமையாக பதிவு செய்துள்ளோம் இந்த விசாரணை அறிக்கை கோர்வையாக்கி 3 நாட்களில் ஆணைய தலைவரிடம். சமர்ப்பிக்கப்படும். குழந்தை திருமணம் நடந்தது உண்மையா என்ற கேள்விக்கு. குழந்தையிடம் விசாரணை செய்தபோது அதுபோல் நடக்கவில்லை என்றகின்றனர். எங்களை அப்படி சொல்ல வைத்தார்கள் என தெரிவிக்கின்றனர் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதற்காக ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் பிரைவேட் பார்ட் தொடப்பட்டது உண்மை விசாரணை முழுமையான தகவல்களை நான் வெளியில் சொல்ல முடியாது குழந்தைகள் குறித்து எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆணையம் துாய்மையாக நடந்து வருகிறது.