கமுதி ; கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த மே.16ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம்,சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கௌரவ செட்டியார்கள் உறவின் முறை இளைஞர்கள், பொதுமக்கள் செய்தனர்.