கமுதி: கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த மே.16ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக 208 விளக்குபூஜை நடந்தது. தினந்தோறும் மாலை காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம் நடைபெற்று ஒவ்வொரு அலங்காரத்தில் பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கௌரவ செட்டியார்கள் உறவின் முறை இளைஞர்கள், பொதுமக்கள் செய்தனர். விளக்கு பூஜையில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.