திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 04:05
காரைக்கால் : திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது அதைத்தொடர்ந்து 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும்.23ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கு வீதி உலா நடந்தது. நேற்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், இன்று வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் செண்பதியாகராஜர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 28ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும். வீகும் 30ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 31ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது.1ம் தேதி தெப்ப உற்சவமும்,வரும் 2ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் குலோத்துங்கன்.தருமை ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.