கடவுள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் வரஎண்ணினாராம். அதற்காகவே தாய் வடிவம் ஏற்றுகொண்டதாகச் சொல்வர். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்க்குஈடு இணை ஏதுமில்லை. சந்நியாசம் ஏற்றாலும் தாய்ப்பாசத்தை விடுவதில்லை. ‘அவளை இனி எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்றுகதறுகிறார் பட்டினத்து சுவாமிகள்.