விழுப்புரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2023 01:05
விழுப்புரம், விழுப்புரம் ராகவன்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா உற்சவம், நேற்று காலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையொட்டி ஊர் எல்லையில் இருந்து, மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல் மற்றும் காத்தவராயன், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. பிறகு மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 2:00 மணிக்கு மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும், சாகை வார்த்தல் வழிபாடு நடந்தது. இதில், பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு வீதியுலா நடந்தது. தொடர்ந்து வரும் ஜூன் 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.