நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!’ என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணம் படிப்பது சிவனடியார்களின் வழக்கம். ‘சொல்லிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்கிறது சிவபுராணம். இப்பாடலை பொருள் புரிந்து பாடுவோர் சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். பக்திப்பாடல்களை பொருள் புரிந்து பாடுங்கள்.