திருப்பதி பெருமாளை தரிசிக்க முதலில் திருமலைக்கு செல்ல வேண்டும். இம்மலைக்கு பலரும் பாதயாத்திரையாக செல்வர். அப்படி நடந்து செல்பவர்கள் முதலில் ஸ்ரீபாத மண்டபத்தை அடைவர். அதைக் கடந்ததும் ஒரு பெரும் பாறையை பார்க்கலாம். அனுமனின் திருவுருவத்துடன் துலங்கும் இந்தப் பாறையை, ‘தலையேறு குண்டு’ என அழைப்பர். இங்கு தலை பதித்து வணங்கினால், திருமலைக்கு சென்று சேரும்வரை தலை, கால், உடல்வலி போன்ற உபாதைகள் வராது. சவுகரியமாகப் பெருமாளை தரிசிக்கலாம்.