‘மு’ என்றால் முகுந்தனாகிய பெருமாளைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ருத்ரனாகிய சிவபெருமானைக் குறிக்கும். ‘க’ என்றால் பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்குரிய பெயர்களில் முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என வரும். முருகப்பெருமானை வணங்கினாலே மும்மூர்த்திகளின் அருளை பெறலாம். முருகன், குமரன், குகன் என சொன்னாலே அனைத்து செயல்களும் சிறக்கும் என்கிறார் முருகனின் அடியவரான அருணகிரிநாதர்.