அரசமரத்தடிகளில் வானம் பார்க்க அமர்ந்திருப்பவர்தான் பிள்ளையார். அந்த அளவிற்கு எளிமையானவர். குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் (ஓம்) எல்லாவற்றுக்கும் முதல். பிரணவம் என்றால் புதியது. இதில் இருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். இவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும். குழந்தையாக இருந்துகொண்டே பக்தர்களை ஒரேயடியாகத் கைதுாக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். இவரது பெரிய பக்தை அவ்வையார். பிரணவ ஸ்வரூபியான இவரை புருவ மத்தியில் தியானித்து, ‘விநாயகர் அகவலை’ பாடினார். இதைப் பாராயணம் செய்தால் ஞானம் கிடைக்கும்.