ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான வார்த்தை நன்றி. ஒவ்வொருவரும் விருப்பப்பட்டவர்களிடம் வார்த்தையாலும் செயலாலும் இதனை வெளிப்படுத்துவர். இதை அடுத்தவருக்கு தெரிவிக்கும் போது ஆழ்மனதில் இருந்து வெளிப்படுத்துவது அவசியம். இதை செயல்படுத்த பணம் தேவையில்லை. மனமிருந்தாலே போதும். எந்த செயலாக இருந்தாலும் பிரதிபலன் பார்க்காமல் நன்றி தெரிவித்து பாருங்கள். நீங்களே உங்களை அழகுள்ளவராக செதுக்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர். நன்றி செலுத்துதல் என்னும் பண்பு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை உண்டாக்கும்.