தந்தையுடன் குறுகிய பாலம் ஒன்றில் நடந்து சென்றாள் சிறுமி. இருபக்கமும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. அப்பா! நான் உங்கள் கையை பிடித்துக் கொள்ளவா என கேட்டாள். வேண்டாம் மகளே! நான் உன் கையை பிடித்துக்கொள்கிறேன் என்றார். இதில் என்ன வேறுபாடு என கொஞ்சும் குரலில் கேட்டாள் சிறுமி. அதற்கு அவரோ! சிக்கலான சூழலில் எப்படி நடக்க வேண்டும் என்பது உனக்கு தெரியாது. இதுவோ குறுகிய பாலம். கீழே ஓடும் தண்ணீரை திடீர் என நீ பார்த்து அதனால் உண்டான பயத்தில் உன்பிடியை விட்டாலும் விட்டு விடுவாய். அதனால் நான் உன் கையை பிடித்துக் கொள்கிறேன் என்றார் தந்தை. பெற்றோர் சொல்லும் வார்த்தை யாவும் நன்மைக்கே.