* அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும். * ஏழைகளின் கண்ணீர், கூரிய வாளுக்கு சமம். * பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான். * நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் எதற்கும் பயப்படவோ, துயரப்படவோ மாட்டார்கள். * கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள். * பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உங்களை மதிக்கும். * கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை. * போதும் என்ற மனமே உண்மையான செல்வம். * பிறர் மீது கருணை காட்டினால், இறைவனும் உங்கள் மீது கருணை காட்டுவான். * எந்தவொரு சிறிய நன்மையையும் அலட்சியமாகக் கருதாதீர்கள். * கோபம், பசி, தாகம், இயற்கை உபாதை தொந்தரவுடன் இருக்கும்போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம். * மனிதர்களின் இயல்புகளை புரிந்து கொண்டால் துன்பம் இல்லை. – பொன்மொழிகள்