பெரிய மீன் ஒன்றை ஒரே சமயத்தில் இரண்டு கொக்குகள் பிடித்தன. தலையை பிடித்த கொக்கு எனக்குத்தான் மீன் என்றும், வாலை பிடித்த கொக்கு எனக்குத்தான் மீன் என்றும் சண்டையிட்டுக் கொண்டது. நாம் இருவருக்குள் சண்டை வேண்டாம். இருவரும் நீதி மன்றம் செல்வோம் என்றது. அங்கிருந்த நரி வழக்கை விசாரித்தது. யார் எதை பிடித்தீர்களோ அவர்களுக்கு அது சொந்தம் என தீர்ப்பு வழங்கியது. மகிழ்ச்சியில் இருந்த கொக்குகளிடம் தீர்ப்பு சொன்ன எனக்கு மீனின் நடுப்பகுதி சொந்தம் என சொல்லியது நரி. இப்படித்தான் மனிதர்கள் சிலர் உறவுகளுக்குள் சண்டையிட்டு நீதி மன்றம் வரை சென்று வாழ்க்கையை பாழக்குகின்றனர். பிரச்னையை உங்களுக்குள் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகும்.