* சிக்கனமாக வாழ்பவர் சீக்கரம் பணக்காரராக ஆவார். * ஆசையை விட்டவருக்கு அதிகாரத்தில் ஆர்வம் இருக்காது. * செயலை கடினமாக்குவது சோம்பல். அதற்கு வடிவம் தருவது உழைப்பு. * மன நிறைவு வேண்டுமா அடுத்தவருக்கு உதவி செய். * நிதானமாக செய்யும் செயல் நுாறு சதவீதம் இலக்கை அடையும். * அடுத்தவருக்காக வாழாதீர்கள். * குழந்தைகள், பெரியவர்களிடம் சினந்தும், கடிந்தும் பேசாதீர்கள். * மனம் துாய்மையாக இருந்தால் நல்லது தீயது எது தெரிந்து கொள்வீர். * நற்செயலுக்கு நேரம் செலவழியுங்கள். * தவறு செய்தவர்கள் தப்பிக்கலாம். ஆனால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. – பொன்மொழிகள்.