செல்வந்தரான டேனியலுக்கு தான தர்மங்கள் செய்வதில் விருப்பமில்லை. இது பற்றி அவரது மனைவி என்ன சொன்னாலும் ‘‘என்ன அவசரம்’’ இறந்து போய் விடவா போகிறோம். பிறகு பார்த்துக் கொள்வோம் என பதில் சொல்லுவார். இந்த குணத்தை எப்படி மாற்றுவது என யோசித்தாள். ஒரு நாள் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். கொடுத்த மாத்திரைகளை சாப்பிடுங்கள். சரியாகி விடும் என்றார் மருத்துவர். வாங்கிய மாத்திரைகளை அலமாரியில் வைத்து பூட்டினாள் மனைவி. ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டார் அவர். மாத்திரை சாப்பிட என்ன அவசரம் இறந்து விடவா போகிறீர்கள். நான்கைந்து நாட்கள் கழித்து சாப்பிடுங்கள் என அமைதியாக சொன்னாள். அதைக்கேட்ட அவர் ‘‘அறிவுக்கண்ணை திறந்தாய். தாமதிக்காமல் தான தர்மம் செய்வேன் ’’ என்றார் டேனியல்.