தனுஷ்கோடி ராமர் கோயிலுக்கு பக்தர் வாகனத்திற்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2023 10:05
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்கு வாகனத்திற்கு தடை விதித்ததால், பக்தர்கள் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தனுஷ்கோடி அருகே ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கோதண்டராமர் கோயிலில் நேற்று ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிம் நிகழ்ச்சி நடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் வரும் வெளியூர் பக்தர்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வெளியூர் வாகனங்களை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஒரு கி.மீ., தூரம் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமத்துடன் நடந்து சென்று கோதண்டராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். இனி வரும் நாளில் பக்தர்கள் வசதிக்காக கோதண்டராமர் கோயில் அருகே கூடுதல் வசதியுடன் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.