கடுகு சந்தை சண்முகநாதர் கோயிலில் ஜூன் 2ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2023 10:05
சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை கிராமத்தில் உள்ள சண்முகநாதர், முத்து வைரத்தாள், முத்து இருளப்ப தேவர் கோயிலில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 2ல் நடக்க இருக்கிறது. மே 31 புதன்கிழமை அன்று அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை உடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. ஜூன் 1 இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதியும் தொடர்ந்து நடக்கிறது. ஜூன் 2 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:15 மணியளவில் மூலவர் சண்முகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களும் தொடர் அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணியளவில் வள்ளி தெய்வானை, சண்முகநாதருக்கு திருக்கல்யாண உற்ஸவமும் இரவு 10:00 மணியளவில் வள்ளி திருமண நாடகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.