நகரி: திருச்சானூர் பத்மாவதி கோவிலில், ஆண்டு பவித்ர உற்சவ விழா, நேற்று துவங்கியது. இதையொட்டி, 29ம் தேதி வரை, 3 நாட்கள் கோவிலில், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். கோவிலும் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், காள ஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலிலும், நேற்று முன்தினம், அங்குரார்ப்பன பூஜையுடன் பவித்ர உற்சவம் துவங்கியது.