பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தின் போது, சக்ரங்களுக்கு தடுப்புக்கட்டை போடுபவர்களுக்கு, ரூ.1 லட்சம் வீதம் இன்சூரன்ஸ் செய்ய அதிகாரிகள், பக்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் தலைமை வகித்தார். பக்தசபா மூத்த உறுப்பினர் அரிஹர கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். வீரியப்பெருமாள் வி.ஏ.ஓ., கருப்பையா எஸ்.ஐ., தீயணைப்புத்துறையினர், உள்ளாட்சித்துறையினர் கமிட்டி நிர்வாகிகள் ராமச்சந்தி ரன், சேதுசெல்லச்சாமி, மகாலிங்கம், நடராஜன், வாசுதேவன், சத்யமூர்த்தி, பல்வேறு சமூகங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்து பேசினர். கூட்டத்தில் தேர்சக்கரங்களுக்கு தடுப்புக்கட்டை போடுபவர்கள், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் இன்சூரன்ஸ் செய்தல். தேரில் அமரவேண்டியவர்கள் முதல் கட்டை போடுபவர்கள் வரை அனைவருக்கும் சீருடை வழங்குதல். தேரோட்ட வீதிகளில் ரோடுகளையும், குடிநீர் தொட்டிகளையும் மூடி சீர்செய்தல், உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.