அரிஹர புத்திர அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 03:05
மேலூர்: சாத்தமங்கலத்தில் உள்ள அரிஹர புத்திர அய்யணார் கோயில் வைகாசி மாத திருவிழா துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இன்று இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவிகளை 10 கி.மீ., துாரத்தில் உள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை (மே 30) மந்தையில் இருந்து புரவிகள் அய்யணார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொங்கல் வைக்கப்படும். இதில் சாத்தமங்கலம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.