திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் நிலம் 93 சென்ட் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 11:05
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டதோடு கட்டணத்தொகை செலுத்தாமல் இருந்த 93 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்கு சொந்தமா நன்செய் நிலம் மேலப்பாளையம் பகுதியில் உள்ளது. நிலுவை பதிவேட்டின் படி ஆயிஷா பீவி என்பவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் கோயில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து அனுபவம் செய்து வந்த பட்டன் என்பவர் கோயிலுக்கு செலுத்த வேண்டிய ரூ 3 லட்சத்து 90 ஆயிரத்து 855ஐ செலுத்தாமல் இருந்தார். இது தொடர்பான வழக்கில் நேற்று நெல்லையப்பர் கோயில் உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்று 93 சென்ட் நிலத்தையும் மீட்டு கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.