தருமபுரம் ஆதீனத்தில் பிரசித்தி பெற்ற பட்டணப்பிரவேச பல்லக்கு உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 11:05
மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பிரசித்தி பெற்ற பட்டணப்பிரவேச பல்லக்கு உற்சவம், வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 9-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 10-ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இப்பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் பட்டணப் பிரவேச விழாவை கடந்த ஆண்டு நடத்த தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து இவ்விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.