கட்டிக்குளத்தில் அம்மனுக்கு ஓலைப்பட்டியில் அசைவ உணவு; பெண்கள் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 11:55
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் 250 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரிய முறைப்படி ஓலைப்பட்டிக்குள் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று சவுந்தரநாயகி அம்மனுக்கு படைத்து வினோத வழிபாடு நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அக்ராமத்தைச் சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் ஆட்டுக்கறி,கோழிக்கறி, மீன்,கருவாடு முட்டை போன்ற அசைவ உணவுகள் மற்றும் மாவினால் விநாயகர்,மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து அதனை ஒரு ஓலைப்பெட்டியில் வைத்து விளக்கேற்றி நள்ளிரவில் ஊரைச் சுற்றி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சௌந்தரநாயகி அம்மனுக்கு படைத்த பின்னர் பெண்கள் கோயிலை சுற்றி கும்மியடித்து பாட்டு பாடி, குலவையிட்டுஅம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தார்.அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.