கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 12:06
நத்தம், நத்தம்-கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் மாலை 4.50 மணிக்கு நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று ஜூன் 1-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 2-ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3-ம் தேதி சனிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.