கோவை ; கோவை, ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கால யாக பூஜைகளுக்கு பின் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராஜகோபுரம், மூலவருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.