குலதெய்வம் வழிபாடு; 15 நாட்களுக்கு பின்பு சொந்த ஊர் திரும்பிய 56 கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 01:06
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ராஜபாளையம் அருகே கூடமுடைய அய்யனார் கோயில் குலதெய்வ வழிபாட்டிற்கு 15 நாள் மாட்டு வண்டியில் பயணத்தை முடித்து மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.
கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்க்கிராமத்தில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்கள் குடும்பத்துடன் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எர்ச்சீஸ்வர பொன் இருளப்பசாமி கோயில், சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயில், சிவகாசி அருகே உள்ள மல்லி வீரமாகாளியம்மன் கோயில் குடும்பத்துடன் மாட்டு வண்டியில் 15 நாள் பயணமாக புறப்பட்டு சென்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தும் நவீன காலத்திலும் கூட பாரம்பரிய மாறாமல் மாட்டுவண்டியில் சென்று மட்டும்தான் எங்கள் குலதெய்வ வழிபாடு தொடர்கிறது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து மக்களும் ஒன்று சேர்ந்து செல்வது வழக்கமாக உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்பு இப்பயணத்தில் போது 215 மாட்டுவண்டிகள் சென்றோம். 15 நாள் பயணமாக சென்று குலதெய்வ கோயிலில் வழிபட்டு நேற்று சொந்த ஊருக்கு 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டியில் 56 கிராமமக்கள் மீண்டும் திரும்பினார். கொரோனா காலகட்டத்தில் இருந்து மீண்டும் குலதெய்வ கோயிலில் வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று கிராமமக்கள் கூறினர்.