பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
01:06
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே, மோர்ப்பண்ணை ரண பத்ரகாளியம்மன் கோயில், வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பூக்குழி விழாவில் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மோர்ப்பண்ணை ராண பத்திரகாளியம்மன் கோயில், வைகாசி விசாக விழா, மே 23 ல்,காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பொங்கல் விழா, உற்சாவ நாயகி வீதி உலா, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை, முளைப்பாரி ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து மாலையில், விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து, பூக்குழி இறங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில், கிராமத் தலைவர் சிங்காரம், முன்னாள் தலைவர் துரை.பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.