Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் வேலுக்கு என்ன சிறப்பு?
முதல் பக்கம் » வைகாசி விசாகம் -2023
வைகாசி விசாக நாளின் பிற சிறப்புகள்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக நாளின் பிற சிறப்புகள்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2023
04:06

வைகாசிப் பவுர்ணமியில் வரும் விசாக நாள் என்பது முருகப்பெருமான் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தத் திருநாள் என்பதால், அன்று முருகப்பெருமான் அருள்புரியும் கோயில்கள் விழாக் கோலம் காணும். சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு சந்தனத்தால் அபிஷேகமும், மணமுள்ள மலர்களால் அலங்காரமும் செய்வார்கள். மேலும், புத்தர் பெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும், முக்தி பெற்றதும் இந்நாளில்தான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவமிருந்து இறைவனிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெற்றதும் வைகாசி விசாகம். ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதார தினம் வைகாசி விசாகம். பொதுவாக, ஐப்பசிப் பவுர்ணமி நாளன்று சிவன்கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் கோயிலில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரருக்கு வைகாசிப் பவுர்ணமியில் அன்னாபிஷேகம், பால் - மங்காய் நிவேதன வழிபாடுகள் நடைபெறும். இதனை தரிசித்தால் பசித்த வேளைக்கு உணவு நம்மைத் தேடிவரும் என்பது ஐதீகம்.

சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவரை முருகனின் அவதாரமாகக் கூறுவர். தந்தையுடன் சென்ற  சிறுகுழந்தையான சம்பந்தர், குளக்கரையில் பசியால் அழுதார். அவரது அழுகையைப் பொறுக்காமல் அம்மையப்பர் காளை வாகனத்தில்  எழுந்தருளினர். அம்பிகையும் ஞானசம்பந்தரின் பசி நீங்க பாலூட்டினாள். இறையருளால் தோடுடைய செவியன் என்று தேவாரத்தைப்  பாடத் தொடங்கினார். ஆதிசங்கரரும் சவுந்தர்யலஹரியில் சம்பந்தரைப் பற்றி பாடியுள்ளார். பர்வதராஜனின் மகளான பார்வதிதாயே!  திராவிட சிசுவிற்கு (தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தருக்கு) பாலை வழங்கினாய். அதன் சிறப்பால் அக்குழந்தை பாடும் திறன் பெற்று  எல்லோரையும் கவர்ந்தது, என்று குறிப்பிடுகிறார்.

 
மேலும் வைகாசி விசாகம் -2023 »
temple news
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி ... மேலும்
 
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 
temple news
முற்றுப்பெற்ற ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க ஞானத்தலைவன் முருகன்தான் ஞானமளிப்பவன் ... மேலும்
 
temple news
முருகனுக்கு வேல் தான் அடையாளம். எல்லா தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி இருந்தாலும், வேலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar