அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உச்சினி மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.