எமனேஸ்வரம் வைகாசி விழாவில் பூ பல்லக்கில் பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 06:06
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் பூ பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார். இக்கோயிலில் பிரம்மோற்ஸவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு 7:00 மணிக்கு பூ பல்லக்கில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு கோயிலை அடைந்தார். அப்போது வீடுகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் வெண்ணைத்தாழி நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் அதிகாலை குதிரை வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி திருமங்கை ஆழ்வார் வேடு பரியாகம் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 5:00 மணிக்கு தேரோட்டமும், நாளை (ஜூன் 2) இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.