ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர நாளன்று கருடசேவை நடந்தது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கருட சேவை நடப்பது வழக்கம். மேலும் திருவோண நட்சத்திர நாளன்று காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் கட்டளைதாரர் மதுரா கோட்ஸ் ரவணசமுத்திரம் ராமசுப்பிரமணியன் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளை ரெங்கநாத ஐயங்கார், சம்பத்குமார் நடத்தினர். மாலையில் சகஸ்கர நாம ஜெபம், விசேஷ தீபாராதனை நடந்தது. இரவில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளல், சிறப்பு பூஜைகள் நடந்தது.