பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
03:06
காரமடை ; காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி தேவனை சமேத முருகப்பெருமான் மனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காரமடை அருகே, குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஜூன் 1ம் தேதி காலை, 6:30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராஜகோபுரம், மூலவர், பரிவார் தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி தேவனை சமேத முருகப்பெருமான் மனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் மிராசுதாரர்கள், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.