பழையனூர்: பழையனூர் அருகே ஓடாத்தூரில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடந்தது. ஓடாத்தூரில் ஸ்ரீ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடத்தப்பட்டது. கிராமத்தை காக்கும் அய்யனாருக்கு புதிய குதிரை செய்து ஊர்வலமாக கொண்டு சென்று வழங்குவது வழக்கம். ஓடாத்தூர் அய்யனாருக்கு வேளார் தெருவில் தயாரான புரவிகளுக்கு வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமணம் ஆக வேண்டி இளைஞர்கள் புரவிகளை சுமந்து ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு வந்தனர். நேர்த்திகடன் விரதமிருந்த பக்தர்கள் குழந்தை பொம்மை, காளை பொம்மை ஆகியவற்றை சுமந்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஓடாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.