பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
06:06
அமெரிக்கா: அமெரிக்கா, நியூ ஜெர்ஸியில் மிகப்பெரிய மஹா பெரியவர் மணிமண்டபம் கோயில் கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
பேசும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் ஒரு அணையா விளக்காக திகழும் வண்ணம் ஓர் கோவில் அமைக்க வேண்டும். அக்கோவில் காலங்கடந்து நிற்குமளவுக்கு கருங்கல்லினால் ஆக்கப்பட வேண்டும் , அதுவும் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களின் மனதில் தோன்றி, அந்த சங்கல்பத்தை முன்னிட்டு, ஸ்ரீ மஹாபெரியவா திரு பாதுகையுடன் உலகெங்கும் யாத்திரை சென்று, அமெரிக்காவில் இது வரை 40 மாநிலங்களுக்கு மேல் சென்றும், நமது பாரத பூமியில் பற்பல இடங்களுக்கு சென்றும், அது மட்டுமின்றி, நம் பூவுலக கண்டங்களில் பல நாடுகளுக்குச் சென்றும், யுனைடெட் கிங்டம், அபூதாபி, மஸ்கட், பஹ்ரின், கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல இடங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் வீடுகளுக்குச் சென்றும், பூஜைகள் செய்து அவர்களின் பிரார்த்தனைகள் மற்றும் பங்கேற்பின் மூலம், ஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் ஸ்ரீ ஜெயேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கரவிஜயேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் சத்குரு ஸ்ரீ சிவன் ஸார் அனுக்ரஹத்தினால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஆலய திருப்பணி முடிந்து மஹா கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு மஹாபெரியவா அருள்பெற வேண்டும் என அமெரிக்கா, காஞ்சி காமகோடி சேவா பவுண்டேஷன் கேட்டுக்கொண்டுள்ளனர்.