காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2023 05:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் கோயில் அருகில் உள்ள ஜலவிநாயகர் சுவாமி சன்னதி அருகில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணியை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு சீனிவாசலு பார்வையிட்டார். சொர்ணமுகி ஆறு மாசுபடாமல் பாதுகாக்கப்படும் என்றும், பக்தர்களுக்கு பொது கழிப்பறைகளை விரைவில் கட்டுமானப்பணியை நினைவுச் செய்யப்பட்டு பக்தர்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் 38 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்களின் வசதிக்காக, பொது கழிப்பறைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்கள் கோயிலின் சுற்றுவட்டாரத்தில் குளியலறை இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அஞ்சுறு சீனிவாசலு, கோவில் சுற்றுவட்டாரத்தில் பொது கழிப்பறைகள் கட்ட அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்து வருடாந்திர மகாசிவராத்திரி க்கு முன்னர் பொது கழிப்பறைகளை கட்டும் பணியை துவக்கி வைத்தார். சொர்ணமுகி ஆற்றின் கரையில் கழிப்பறை கட்டினால் ஆறு மாசுபடும் என சிலர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் சேராத வகையில் செப்டிக் டேங்க் அமைத்து வருவதாகவும், கழிப்பறைகள் கட்டும் பணி தொடரும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இப்பணிகளை கோயில் தலைவர் அஞ்சூரு. சீனிவாசலு இன்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, பொறியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். பொதுக் கழிப்பறைகள் விரைவில் பக்தர்களுக்கு பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மேலும் ஸ்ரீகாளஹஸ்தி ராஜகோபுரம் அருகில் மற்றொரு பொது கழிப்பறை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். சொர்ணமுகி ஆற்றின் புனிதத்தை பாதுகாக்க எதிர்காலத் தில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கோயில் துணை பொறியாளர் கிஷோர்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.