அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியில் பதினெண் கிராம நாடார் குல நாட்டாண்மை பூசாரி வகையறா பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் சாமி வீட்டிலிருந்து அம்மன் பெட்டி கோயிலுக்கு அழைத்து வந்தனர். சக்தி கரகம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனையும், சக்தி கிடா வெட்டி வழிபட்டனர். 2ம் நாள் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை, படையல், பத்திரகாளி அம்மன் கருப்புசாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனையும் நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தனர். இன்று (ஜூன்4) அம்மன் பெட்டி சாமி வீடு சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.